குப்பையில்லா மாநகராட்சிக்கான சான்றுக்கு விண்ணப்பிக்கும் கோவை - பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்க மாநகராட்சி ஆணையர் அழைப்பு..!

குப்பையில்லா மாநகராட்சிக்கான 3 ஸ்டார் ரேட்டிங்குக்காக கோவை மாநகராட்சி விண்ணப்பிக்க உள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை நேரடியாகவோ எழுத்துப் பூர்வமாகவோ மாநகராட்சி ஆணையரிடம் தெரிவிக்க அழைப்பு.



கோவை: கோவை மாநகராட்சி குப்பையில்லா மாநகராட்சிக்கான 3 ஸ்டார் ரேட்டிங்குக்காக விண்ணப்பிக்க உள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை நேரடியாகவோ எழுத்துப் பூர்வமாகவோ மாநகராட்சி ஆணையரிடம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய நகாப்புற மற்றும்‌ வீட்டுவசதி அமைச்சகத்தின்‌ தூய்மை பாரத திட்டம்‌ 2.0-வின் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ்‌ ஓவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளுக்கும்‌ STAR RATING வழங்கப்பட்டு வருகிறது.

இதன்‌ ஒரு பகுதியாக கோவை‌ மாநகராட்சியில்‌ உள்ள 100 வார்டு பகுதிகளில்‌ சேகரிக்கப்படும்‌ திடக்கழிவுகளை, திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி முறையே தரம்‌ பிரித்து கையாளப்பட்டு வருகிறது.

எனவே கோவை மாநகராட்சியினை குப்பையில்லா மாநகராட்சியாக (Garbage Free City) மூன்று நட்சத்திர அங்கீகாரம்‌ (Three Star Rating) என சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்க உள்ளது.

பொதுமக்கள்‌ இதுகுறித்த தங்களின்‌ ஆட்சேபனைகள்‌ மற்றும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால்‌ 15 நாட்களுக்குள்‌ தெரிவிக்கலாம்.

அவ்வாறு தெரிவிக்க விரும்புபவர்கள், கோவை‌ மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது எழுத்துப் பூர்வமாகவோ ஆலோசனைகள்‌ மற்றும்‌ ஆட்சேபனையை மாநகராட்சி ஆணையாளரிடம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...