திமுக அரசை கண்டித்து கோவையில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் - அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் கோவை சிவானந்தா காலனி பகுதியில் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ள உண்ணாவிரத போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்..


கோவை: தமிழகத்தில் மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்வு மற்றும் சாலை பராமரிப்பு செய்ய வலியுறுத்தியும் கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.



அதன்படி, கோவை மாவட்டத்தில் சொத்து வரி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, பால் விலை, கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், கோவை மாவட்டத்தில் சாலைகள், மேம்பால பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தியும் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.



முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் கோவை சிவானந்தா காலனி பகுதியில் நடைபெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.



இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...