கோவை மாவட்டத்தில் குறைந்தபட்ச சாலைகளை கூட தமிழக அரசு போடவில்லை - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கோவையில் முதல் முறையாக குடிநீர் ஏ.டி.எம் இயந்திரம் திட்டத்தை துவங்கி வைத்த கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், தமிழக அரசு கோவை மாவட்டத்தை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டினார்.



கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் மற்றும் உக்கடம் பகுதியில் தலா ரூ.17.17 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா ஏ.டி.எம் குடிநீர் இயந்திரத்தை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் துவங்கி வைத்தார்.



கோவை மாவட்டத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்டு உள்ள இந்த இயந்திரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பெறப்பட்டுள்ளது.



இதற்காக அந்த வார்டு மக்களுக்கு ஏ.டி.எம் போன்ற எலக்ட்ரானிக் அட்டை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.



அதனைக் கொண்டு ஒரு நாளைக்கு 20 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி, அப்பகுதியில் உள்ள ஆயிரம் குடும்பத்தினருக்கு இந்த எலக்ட்ரானிக் அட்டை வழங்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், குடிநீர் ஏடிஎம் மையத்தை திறந்து வைத்த பின் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, பெண்கள் சிரமத்தை போக்கும் வகையில் ஒரு நாளுக்கு 20 லிட்டர் குடிநீர் எந்த நேரத்திலும் பிடித்து கொள்ளும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டு உள்ளது.

நடப்பாண்டில் தொகுதி முழுவதும் 5 இடங்களில் இந்த இயந்திரம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். ராமநாதபுரத்தை அடுத்து இரண்டாவதாக குடிநீர் ஏ.டி.எம் உக்கடம் பகுதியில் துவக்கி வைக்க உள்ளோம்.

கோவை மாவட்டத்தில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. இதை கண்டித்து நேற்று நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் அதனால் தான் நான் கலந்து கொண்டேன். சாலை விவகாரத்தில் தமிழக அரசு கோவை மாநகராட்சிக்கு துரோகம் செய்து வருகின்றனர்.

மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுவதில்லை. குறைந்தபட்ச சாலைகளை கூட போடுவதில்லை, குப்பைகளை முறையாக தூய்மை செய்வதில்லை, அதற்கு கூட எம்.எல்.ஏ நேரடியாக தலையிட வேண்டியுள்ளது.

உள்ளாட்சி தேர்லில் கொலுசு கொடுத்து வெற்றி பெற்ற திமுக பொறுப்பு அமைச்சர் கோவை மக்கள் முட்டாள் என நினைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு கோவை மக்கள் தகுத்த பாடம் புகட்டுவர்.



நான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறேன். அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகளை அவர்கள் (திமுக) புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது.

சூயஸ் திட்டம் என்பது 24 மணி நேரம் குடிநீர் வழங்குகின்ற திட்டம் தான், அதே சமயம் பொது குடிநீர் குழாய்களை அவர்கள் அகற்றினால் இது குறித்து மாநகராட்சியிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்வோம்.

பாஜக கட்சியில் பெண்களை தரக்குறைவாக நடத்துவதாக பாஜக-வில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ஏதேனும் சிக்கல்கள் அவருக்கு இருந்திருந்தால் இதற்கென, பொதுவெளியில் பேசுவதை விட, யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடம் பேச முயற்சி செய்ய வேண்டும்.

பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு இன்றைய தேதியில் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளதாகவும் எவ்வித மாற்றங்களும் இல்லை என பதிலளித்தார். இந்த நிகழ்வில் கோவை பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...