நீலகிரி உதகை - மசினகுடி நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த மக்னா யானை - வாகன ஓட்டிகள் அச்சம்..!

மக்னா யானை வழிமறித்ததால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திய நிலையில், சுமார் அரை மணி நேரம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென்ற பின் போக்குவரத்து சீரானது.



நீலகிரி: உதகை அருகே உள்ள மசினகுடி பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்காக ஊட்டிக்கு தான் வந்து செல்ல வேண்டும்.

அதற்காக அவர்கள் மசினகுடி - மாவனல்லா - கல்லட்டி மலைப்பாதையை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சார்ந்த சுற்றுலா பயணிகளும் இந்த சாலை வழியாக தான் உதகைக்கு வருகின்றனர்.

சுமார் 30 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த நெடுஞ்சாலையின் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி இருப்பதால் அடிக்கடி காட்டு யானைகள் சாலை ஓரத்திற்கு வருவது வழக்கமாக உள்ளது.



இந்த நிலையில் நேற்று மாலை மக்னா யானை என்று அழைக்கக்கூடிய தந்தம் இல்லாத ஆண் யானை ஒன்று பொக்காபுரம் சாலை சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலையின் குறுக்கே வாகனங்களை வழிமறித்து நின்றது.



இதனை கண்டு அச்சமடைந்த வாகன ஓட்டிகள் இருபுறமும் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர்.



இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இந்நிலையில், மக்னா யானை வனப்பகுதிக்குள் சென்றதை எடுத்து போக்குவரத்து சீரானது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...