கோவையில் நடைபெற்று வரும் கிராம உதவியாளர் தேர்விற்கு 3,505 பேர் விண்ணப்பம் - 9 வட்டங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது…!

கோவை மாவட்டத்தில் பேரூர், மதுக்கரை, பொள்ளாச்சி உள்ளிட்ட 9 தாலுக்காவில் நடைபெறும் இந்த கிராம உதவியாளர் தேர்விற்கு 3,505 பேர் விண்ணபித்து தேர்வு எழுதி வருகின்றனர். வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது.


கோவை: தமிழகத்தில் உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது.

வாசித்தல், எழுதுதல் என இரண்டு நிலையில் இந்த தேர்வானது நடைபெறும். அதன்படி, எதாவது ஒரு புத்தகத்தில் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். இதற்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். அதேபோல, ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத வைக்கலாம். இதற்கு 30 மதிப்பெண் வழங்கப்படும்.

அதன்பின், நேர்காணல் தேர்வு, மூல சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் அதிகபட்ச மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.



கோவை மாவட்டத்தில் பேரூர், மதுக்கரை, பொள்ளாச்சி உள்ளிட்ட 9 தாலுக்காவில் நடைபெறும் இந்த கிராம உதவியாளர் தேர்விற்கு 3,505 பேர் விண்ணபித்து தேர்வு எழுதி வருகின்றனர். வரும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட தேர்வாளர்கள் பட்டியல் மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...