பட்டா கேட்டு கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்த அத்திக்குட்டை அருந்ததியின மக்கள்..!

கோவை தொட்டியபாளையம் அடுத்த அத்திக்குட்டையை சேர்ந்த அருந்ததியின மக்கள், அரசு நலத்திட்டங்கள் கிடைக்காததால், தாங்கள் வசிக்கும் பஞ்சமி நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தல்.



கோவை: கோவை மாவட்டம் தொட்டியப்பாளையம் அருகேயுள்ள அத்திக்குட்டை பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் அருந்திய சமூகத்தை சேர்ந்த பஞ்சமி நிலத்தை வழங்க கோரி 150 க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



ஆனால் பட்டா ஏதும் இல்லாததால் அரசு வழங்கக்கூடிய நலத்திட்ட உதவிகள் எதுவும் தங்களுக்கு கிடைப்பதில்லை எனவும் கூறுகின்றனர்.

இந்நிலையில், தாங்கள் வசித்து வரும் பஞ்சமி நிலத்திற்கு தங்களுக்கு பட்டா வழங்க வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



மேலும், தங்கள் பகுதிகளுக்கு பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, மனு அளிக்க வந்ததால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...