அன்னூர் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவையில் டிச.7-ல் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் - பாஜக விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ்

தொழிற்பேட்டை அமைப்பதற்காக அன்னூரில் நிலத்தை கையகப்படுத்தும் தமிழக அரசை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் வரும் 7ஆம் தேதி அண்ணாமலை தலைமையில் அன்னூர் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறினார்.


கோவை: அன்னூர் விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 7ஆம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக பாஜக விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்துள்ளார்.



கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பாஜக விவசாய அணியின் மாநில தலைவர் ஜி கே நாகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, அன்னூரில் 3,731.57 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பை மீறி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக விவசாயிகள் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் என போராட்டம் நடத்தி வருகின்றனர். அன்னூர் விவசாயிகளின் போராட்டத்தை தமிழக அரசு செவி சாய்க்க மறுத்தால் பாஜக இந்த போராட்டத்தை முன்னெடுக்கும்.

அன்னூரில் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்த அரசாணை பிறப்பித்ததை ரத்து செய்யக்கோரி டிசம்பர் 7ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அன்னூர் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அவிநாசி அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்பட்டு 115 குளங்கள் நிரப்பப்பட்டு விவசாயத்திற்கு அன்னூர் தயாராகும் வேளையில் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்த அரசாணை பிறப்பித்தது விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.

அதேபோல் வனத்தை விட்டு விவசாய நிலத்திற்குள் வரும் காட்டு பன்றியை சுட வேண்டும் என மத்திய அரசின் வழிகாட்டுதல் இருந்தும் தமிழக அரசு இதுவரை காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தவோ, சுட்டுக்கொல்லவோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதனை கண்டித்தும் டிசம்பர் 14 ம் தேதி கோவையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும். இதற்கு தமிழக அரசு செவி சாய்க்கவில்லை என்றால் கோட்டை நோக்கி விவசாயிகள் செல்வோம்.

அதேபோல, துடியலூர் அருகே உள்ள டியூகாஸ் நிறுவனத்தில் 14 லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டதற்கும், மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இது தமிழக அரசின் செயல்.

அதே சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் டியூகாஸ் விவகாரத்தில் மத்திய அரசை காரணம் காட்டி பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதற்கு காரணமான தமிழக அரசை கண்டித்து கோவையில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...