பாபர் மசூதி இடிப்பு தினம்: உக்கடத்தில் எஸ்.டி.பி.ஐ சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை உக்கடம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



கோவை: பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய அமைப்பினர், அரசியல் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீத் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு அளித்து தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், மற்றும் நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீத் செய்தியாளர்களிடம் பேசியதாவது, பாசிச எதிர்ப்பு தினம் என்ற கோரிக்கையை முன்வைத்தும், பாபர் மசூதியை மீட்டு தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

நாடு முழுவதிலும் உள்ள மதச்சார்பற்ற அரசுகள் அனைத்தும் பாபர் மசூதி வழக்கில் ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். மேலும் பாபர் மசூதி மீட்பு தீர்ப்பு என்ற ஒன்று எழுதப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கு.ராமகிருஷ்ணன் பேசியதாவது, நாட்டில் மத ரீதியான குழப்பத்தை ஏற்படுத்தி தற்போதைய மத்திய அரசும், சங் பரிவார் அமைப்புகள் துடித்துக் கொண்டுள்ளது. இப்போது பிரதமருக்கு ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை கொடுத்ததை கொண்டு தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்கள்.

இதற்கு முன் இந்த ஜி20 நாடுகளின் தலைவர்களாக இருந்தவர்கள் யார் என நமக்கு தெரியுமா? ஆனால் தமிழில் உள்ள பழமொழி போல அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பார்கள் என்பது போல இவரது 24 மணி நேரமும் குடை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் யாரும் விரும்பதகாத ஒரு செயல். ஆனால், இதை வைத்து பாஜக அரசியல் செய்தது, தீபாவளி அன்று நடந்த இந்த சம்பவம் போலீசாரால் முறியடிக்கப்பட்டது. அதை பாஜக ஹிந்து அமைப்பினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. கோவையில் கார் வெடிப்பை வைத்து அரசியல் செய்த பாஜக தலைவர் பாஜக ஆளும் மாநிலம் கார்நாடகவில் குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது அங்கு செல்லவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...