கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட மேயர் கல்பனா..!

கோவை மாநகராட்சியில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 29 பேரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர், மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று‌ மக்கள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம் நடைபெற்றது. மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில்‌ நடைபெற்ற இந்த கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்‌ துணை மேயர் ரா.வெற்றிசெல்வன்‌ மற்றும் மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.



இக்கூட்டத்தில்‌ மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம்‌ மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளைச்‌ சேர்ந்த 29 பேர் தங்களது‌ கோரிக்கை மனுக்களை அளித்தனர்‌.



இதில்‌ பொதுமக்கள்‌ பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள்‌, சாலை வசகி, மின்விளக்குகள்‌, குடிநீர்‌ வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர்‌ மாற்றம்‌, மருத்துவம்‌, சுகாதாரம்‌, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள்‌ குறித்த பல்வேறு கோரிக்கைகள்‌ அடங்கிய மனுக்கள்‌ பெறப்பட்டன.



இவற்றில்‌ கிழக்கு மண்டலத்தில்‌ 5 மனுக்களும்‌, மேற்கு மண்டலத்தில்‌ 6 மனுக்களும்‌, வடக்கு மண்டலத்தில்‌ 1 மனுவும்‌, தெற்கு மண்டலத்தில்‌ 7 மனுக்களும்‌, மத்திய மண்டலத்தில்‌ 3 மனுக்களும்‌, பிரதான அலுவலகத்தில்‌ 7 மனுக்களும்‌ ஆக மொத்தம்‌ 29 மனுக்களை பொதுமக்கள்‌ அளித்தனர்‌.

இக்கோரிக்கை மனுக்களைப்‌ பெற்றுக்கொண்ட மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ இந்த மனுக்களின்‌ மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையர்கள்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

இக்கூட்டத்தில்‌, மண்டல உதவி ஆணையார்கள்‌ அண்ணாதுரை, மோகனசுந்தரி, சேகா்‌, முத்து இராமலிங்கம்‌, மகேஷ் கனகராஜ் ‌(பொ), உதவி ஆணையர் (வருவாய்‌) செந்தில்குமார் ரத்தினம்‌, உதவி ஆணையர்‌ (கணக்கு) சுந்தரராஜ்‌, உதவி ஆணையர்‌ (நிர்வாகம்‌) சரவணன்‌,

உதவி செயற்பொறியாளா்கள்‌, உதவி நகரமைப்பு அலுவலர்கள்‌, உதவி பொறியாளர்கள்‌, மாநகராட்சி அனைத்து அலுவலர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள் உள்ளிட்ட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...