வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.15 லட்சம் கடன் உதவி வழங்கிய கோவை ஆட்சியர்..!

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் புதிய தொழில்களை துவங்க 5 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய தலா ரூ.15 லட்சம் கடன் உதவியை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.


கோவை: கிராமப்புற சமூகங்களின் நிலைத்தன்மை மற்றும் செழிப்பை உருவாக்குவதன் மூலம் கிராமப்புற நிறுவன மேம்பாடு நிதி மற்றும் வேலை வாய்ப்புக்கான மாற்றத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு "வாழ்ந்து காட்டுவோம்" என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர், சர்க்கார் சாமக்குளம் ஆகிய 4 வட்டாரங்களில் உள்ள 54 கிராம ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தை சேர்ந்த 5 பயனாளிகளுக்கு தொழில்களை மேம்படுத்துவதற்காகவும், புதிய தொழில்களை தொடங்கவும் தலா ரூ.15 லட்சம் வங்கி கடன் உதவியை ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

இதில், ரூ.15 லட்சம் கடன் உதவியில், ரூ.4.50 லட்சம் மானியம் - அதாவது கடன் உதவியில் 30 சதவீதத்தை அரசு மானியமாக வழங்குகிறது. கடனாக வாங்கிய தொகையில் ரூ.10.50 லட்சத்தை பயனாளிகள் திரும்ப செலுத்தினால் மட்டும் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...