கோவையில் பொது சுகாதாரத் துறையின் நூற்றாண்டு நிறைவு விழா: இரத்த தானம் செய்தவர்களுக்கு அமைச்சர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு

ரத்த தானம் வழங்கிய பொது சுகாதார துறையை சார்ந்த 20 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, சான்றிதழ்களையும் 15 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் செந்தில் பாலாஜி வழங்கினர்.


கோவை: பொது சுகாதார துறையின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், ரத்த தானம் வழங்கிய பொது சுகாதார துறையை சார்ந்த 20 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அதற்கான சான்றிதழ்களையும் 15 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தையும் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் செந்தில் பாலாஜி வழங்கினர்.



முன்னதாக, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட கட்டிடங்கள், சூலூர் மற்றும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகளில் பிரிவு கட்டிடங்கள், ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள், துணை சுகாதார நிலைய கட்டிடங்களை திறந்து வைத்து புதிதாக வாங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.



அதனுடன், முதலாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கல்லூரி தமிழ் மன்றத்தை துவக்கி வைத்தனர்.



இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, சுகாதார துணை இயக்குனர் அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...