2023 ஆம் ஆண்டுக்கான கோவை மாநகர காவல் துறையினருக்கான வருடாந்திர அணிவகுப்பு பயிற்சி - 15 நாட்கள் நடைபெறுகிறது

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் மாநகர காவல் துறையினருக்கான 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அணிவகுப்பு பயிற்சியில் 550 காவலர்களுக்கு யோகாசனம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.


கோவை: ஆண்டுதோறும் கோவை மாநகர காவல் துறையினருக்கான வருடாந்திர அணிவகுப்பு பயிற்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அணிவகுப்பு பயிற்சி கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாக மைதானத்தில் நடைபெற்று வருகிறது.



கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் ஆயுதப்படை உதவி ஆணையர் சேகர் மேற்பார்வையில் நடைபெற்று வரும் இந்த அணிவகுப்பு பயிற்சியில், மாநகர போலீசாருக்கு உடற்பயிற்சிகள், யோகா, துப்பாக்கி சுடுதல், பொதுமக்கள் இடத்திலான அணுகுமுறை, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.



மேலும், 15 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் சுமார் 550 மாநகர போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதிகாலையில் யோகாசன உடற்பயிற்சியில் துவங்கி தொடர்ந்து துப்பாக்கி சுடுதல், உட்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...