கோவை தடாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட செங்கல் உற்பத்தியாளர் சங்கத்தினர் - பரபரப்பு..!

செங்கல் சூளை நிலத்தை விற்பனை செய்வதாக தனியார் அமைப்பு ஒன்று, தவறான கருத்துகளை பரப்புவதாக கூறி கோவை தடாகம் காவல் நிலையத்தை செங்கல் உற்பத்தியாளர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் சின்ன தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், பசுமை தீர்ப்பாயத்தின் தடை உத்தரவால் செங்கல் சூளைகள் தற்போது இயங்குவதில்லை. இந்த நிலையில் செங்கல் சூளைகள் நடத்தி வந்த ஒரு சிலர் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக தங்கள் இடங்களை விற்பனை செய்ய முயன்று வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த தனியார் அமைப்பு பெயரில் கடிதம் ஒன்று தடாகத்தை சேர்ந்த ஒரு சிலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் பசுமை தீர்ப்பாயம் வழக்கு நடைபெற்று வருவதால் இந்த இடங்களை யாரும் வாங்க வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த தகவலை அறிந்த செங்கல் உற்பத்தியாளர் சங்கத்தினர் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அதன் தலைவர் ஜெம் பழனிச்சாமி தலைமையில் தடாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனுவை அளித்துள்ளனர்.

அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தனியார் அமைப்பின் மூலம் வந்த கடிதத்தில் தவறான கருத்துக்கள் மூலம் பொது மக்களை குழப்பம் அடைய செய்து வருகின்றனர்.

அவர்கள் யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...