தமிழ்நாடு ஹோட்டல்கள் புதுப்பிக்கப்படுவதால் அதிக வருவாயை ஈர்க்க முடியும் - கோவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன்

காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டலில் புனரமைக்கப்பட்ட உணவகத்தை திறந்து வைத்த அமைச்சர் மதிவேந்தன், தமிழக அரசின் சார்பில் முதல் முறையாக பொள்ளாச்சி அடுத்த ஆச்சிப்பட்டியில் பலூன் திருவிழா நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.



கோவை: கோவை மாவட்டம் காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டலில் புனரமைக்கப்பட்ட உணவகத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியதாவது, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் புனரமைக்கப்பட்ட உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.



தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் சுற்றுலா துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஹோட்டல் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சென்னை தீவுத்திடல் தமிழ்நாடு ஹோட்டல் உணவகம், கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள உணவகங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

மேலும் தமிழ்நாடு ஹோட்டல் உணவகங்களில் புதிய உணவு வகைகளையும் அறிமுகப்படுத்த உள்ளோம். இந்த காலகட்டத்தில் தனியார் விடுதிகளுடன் போட்டியிடும் வகையில், அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு ஹோட்டல்கள் புதுப்பிக்கப்படுவதால் அதிக வருவாயை ஈர்க்க முடியும்.

தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் முதல் முறையாக சுற்றுலா தளம் மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தி உள்ளோம், இதன் முலம் 10 முதல் 15 இடங்களை தேர்வு செய்து, அங்கு பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். குறிப்பாக கொள்ளிமலை, ஜவ்வாது மலை, ஏலகிரி, பூண்டி உள்ளிட்ட ஏரிகள், பூம்புகார் ஆகியவையும் புதுப்பிக்க உள்ளோம்.

இது வரை தனியார் சார்பில் பலூன் திருவிழா நடத்தப்பட்டது. முதல் முறையாக பொள்ளாச்சி அடுத்த ஆச்சிப்பட்டியில் தமிழ்நாடு அரசு சார்பில் பலூன் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில்,பலூன் திருவிழாவிற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை இன்று ஆய்வு செய்கிறோம். இந்த பலூன் திருவிழாவில்மாலை நேரத்தில் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...