உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் - ரூ.10 லட்சம் மானியத்துடன் தொழில் துவங்க கோவை ஆட்சியர் சமீரன் அழைப்பு

பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் 10 லட்சம் வரை மானியத்துடன் தொழில் தொடங்க முன்வருமாறு அழைப்பு விடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிக்கை.



கோவை: பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் 10 லட்சம் வரை மானியத்துடன் ரூ.1 கோடி வரை திட்ட மதிப்புடன் தொழில் துவங்க முன்வருமாறு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டமானது ரூ.1 கோடி வரையிலான திட்ட மதிப்பீடு உள்ள உணவு பதப்படுத்தப்படும் தொழில் திட்டங்கள் பயன் பெறதகுதி பெற்றவை ஆகும்.

விண்ணப்பதாரர் திட்ட மதிப்பீட்டு தொகையில் 10 சதவீதம் சொந்த முதலீடு செய்ய வேண்டும், 90 சதவீதம் வங்கிகள் மூலம் கடனாக வழங்கப்படும். திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அதிகபட்சம் ரூ.10 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவு சார்ந்த மதிப்புக் கூட்டு தொழிலில் புதிதாக தொழில் தொடங்கவுள்ளோர் மற்றும் ஏற்கனவே தொழில் நடத்திக் கொண்டிருப்பவர்களின் விரிவுபடுத்த உள்ள தனிநபர், உரிமையாளர் நிறுவனங்கள், பங்குதாரர் நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர் மற்றும் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் ஆகியோர் பயன் பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அதிகபட்ச வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி ஏதுமில்லை. இத்திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தும் வகைப்பாட்டின் கீழ் வரும் அனைத்து தொழில்களும் உதாரணமாக மதிப்புக் கூட்டப்பட்ட தேங்காய் பொருட்கள், தேங்காய் எண்ணெய், உலர் தேங்காய், தேங்காய் துருவல், இளநீர், பால் பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள்,

அரிசி ஆலைகள், மசாலா பொருட்கள், இட்லி மாவு தயாரிப்பு சிறுதானிய உணவு வகைகள், அப்பளம், ஊறுகாய், தொக்கு தயாரித்தல், பேக்கரி பொருட்கள் உற்பத்தி வறுகடலை, சத்துமாவு தயாரித்தல், வற்றல் தயாரித்தல் மற்றும் இனிப்பு கார வகைகள் தயாரித்தல் ஆகியவை அடங்கும்.

மேலும் இத்திட்டத்தின் கீழ், உணவு பதப்படுத்தும் தொழிலுக்கான பொது வசதி மையம் (CFQ) அமைக்க அதிகபட்சம் ரூ.10 கோடி திட்ட மதிப்பீட்டில் 35 சதவீத மானியத்துடன் அதிகபட்சம் ரூ.3.00 கோடி வரை உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்பு, சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவை பயன் பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் கடன் உதவிபெற உள்ளவர்கள் http://pmfme.mopri.gov.in என்ற இணையதள முகவரியில் வின்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பதிவேற்றம் செய்தல், திட்ட அறிக்கை தயாரித்தல் அனைத்தும் இலவசமாக செய்து தரப்படும்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட தொழில் மைய அலுவலர்களை 8870066684, 8248082980, 8939655768, 9500463757 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். எனவே, ஆர்வமுள்ள தொழில்முனைவோர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முன் வரவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...