கோவையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவை சித்தாபுதூரில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சமீரன் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.



கோவை: உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்காக பல்வேறு போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை சித்தாபுதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகள் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.



இதில் மாற்றுத்திறனாளிகள் நடனம், நாடகங்களை நிகழ்த்தி காட்டினர்.



பின்னர் இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியருக்கு காது கேளாத மாற்றுத்திறனாளிகள் இசையுடன் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.



இந்த நிகழ்ச்சியில் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறைவாக உள்ள 12 மாணவர்களுக்கு ரூ.1,62,588 மதிப்புள்ள ஸ்மார்ட் போன்களும், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,79,700 மதிப்பிலான நவீன செயற்கை கால்களையும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,24,000 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளையும் வழங்கினார்.



இதேபோல் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20,800 மதிப்பிலான சி.பி.சேர்களையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,200 மதிப்பிலான ஊன்றுகோல்களும் 11 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தலா ரூ.4,000 வீதம் கல்வி உதவித்தொகை என மொத்தம் 36 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், கோவை மாவட்டத்தில் சுமார் 53,000 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். 22,715 மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்று உள்ளனர்.

வருவாய் துறையின் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து, ரூ.1,500ஆக உயர்த்தி ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சூலூர் பகுதி-3 திட்டப்பகுதி. பன்னீமடை கிழக்கு திட்டப்பகுதி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வர ஏதுவாக தரைத்தளத்தில் 27 மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை 520 மையம் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும், தேவையான நலத்திட்டங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் பாடிய நம்முடைய தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இந்தியா முழுவதும் பிரபலமடைந்துள்ளது. சைகை மொழியில் பாடிய குழந்தைகள் அனைவருக்கும் தனது பாராட்டுக்கள்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...