கோவையில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா: அமைச்சர்கள், நிர்வாகிகள் என 2000 க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்பு..!

மறைந்த தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் ராஜவீதி பகுதியில் இன்று மாலை நடைபெற்றது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.


கோவை: தமிழகம் முழுவதும் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் ராஜவீதி பகுதியில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.



இந்த பொதுக்கூட்டத்தில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கலந்து கொண்டு விழா பேருரையாற்றினார்.



நிகழ்ச்சியில், திமுக மூத்த நிர்வாகி, பொங்கலூர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ நா.கார்த்திக் உட்பட கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், நகர பகுதி ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் உட்பட பொதுமக்கள் என மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...