கோவையில் விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள் - துப்பாக்கியால் கட்டுப்படுத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த துப்பாக்கியை பயன்படுத்த விவசாயிகளுக்கு கேரள அரசு அனுமதி வழங்கியதை போல் தமிழக அரசும் அனுமதி வழங்க வலியுறுத்தி கோவை மாவட்ட வேளாண் உற்பத்தி குழு சார்பில் ஆட்சியரிடம் மனு.



கோவை: கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால், உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் அதிக நட்டம் அடைந்து வருகின்றனர்.

இதே பிரச்சனையை கேரள விவசாயிகளும் சந்தித்து வந்ததால், அவர்களது கோரிக்கையை ஏற்று கேரள மாநிலத்தில் காட்டு பன்றிகளை துப்பாக்கியால் கட்டுப்படுத்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் இதுவரை அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.



இந்த நிலையில்,கோவையில் விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை துப்பாக்கியால் கட்டுப்படுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டி கோவை மாவட்ட வேளாண்மை உற்பத்தி குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



இது குறித்து கோவை மாவட்ட வேளாண்மை உற்பத்தி குழு உறுப்பினர் செந்தில்குமார் கூறியதாவது, சீதோஷ் நிலை, விளைபொருட்களின் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை என பல்வேறு இன்னல்களுக்கு இடையே விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அறுவடைக்கு முன்பாக காட்டு பன்றிகள் கிழங்கு, காய்கறிகளின் ஆகிய விளை பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதால், விவசாயத்திற்காக செலவழித்த பணத்தை முற்றிலுமாக இழக்க வேண்டிய சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, இப்பிரச்சினை குறித்து உடனடியாக மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் ஒன்றிணைந்து முடிவெடுக்க முன்வர வேண்டும். தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், வன அலுவலரை சந்தித்து வனத்துறையினரிடமும் மனு அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விவசாய நிலங்களில் அட்டூழியம் செய்து வரும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த துப்பாக்கியை பயன்படுத்த விவசாயிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக விவசாயிகள் அணி சார்பில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...