கோவை மருத்துவ மாணவர்களின் மன அழுத்தம் போக்க ‘மனநல நல்லாதரவு மன்றம்’ - முதல்வர் துவக்கி வைத்தார்

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவ - மாணவிகளின் மன ரீதியான பிரச்சினைகள் குறித்து ஆலோசனை வழங்கக்கூடிய "மனம்" என்ற மனநலம் பேணும் சேவையை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.


கோவை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கண்டறிந்து, அதற்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கவும், கடும் மன உளைச்சலால் ஏற்படக்கூடிய தற்கொலை எண்ணத்தை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து தடுப்பதற்காக ‘மனநல நல்லாதரவு மன்றம்’ - "மனம்" (Mind Health Support Forum) என்ற சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அவ்வாறு அமைக்கப்படும், மன நல நல்லாதரவு மன்றங்களில் அந்தந்த மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர், மன நலத்துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவர்கள். உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களின் மன நலனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி, இன்று கோவை அரசு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும், வழிகாட்டவும் "மனநல நல்லாதரவு மன்றம்" மற்றும் "நட்புடன் உங்களோடு" ஆகிய மனநல சேவைகளை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

மேலும், இதன் மூலம் மாணவர்களின் நலவாழ்விற்கான வாழ்வியல் நெறிமுறைகள் பற்றிய புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், மாணவர்களின் கலைத்திறன், கற்பனைத் திறன் உள்ளிட்ட அனைத்து வகை தனித் திறன்களை கண்டறிந்து, தனித் திறன் மேம்பாட்டிற்கான வழி வகைகள் உருவாக்கப்படும்.

இதேபோல், "நட்புடன் உங்களோடு" என்கின்ற மனநல சேவைக்காக என்கின்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், மனநலம் சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கப்படும்.



இந்த நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா உட்பட மருத்துவமனை மனநல மருத்துவர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...