கோவை மலுமிச்சம்பட்டியில் டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை - 2 பேர் கைது, 3 பேர் நீதிமன்றத்தில் சரண்…!

கடந்த திங்கட்கிழமை மலுமிச்சம்பட்டியில் நண்பர்களுடன் டாஸ்மாக் கடைக்கு சென்று விட்டு வரும் வழியில், ஐந்து பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் பிரபாகரன் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கில், தலைமறைவாக இருந்த மூவர் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.


கோவை: கோவை மலுமிச்சம்பட்டியில் தொழிலாளி அடித்துக் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது, தலைமறைவாக இருந்த 3 பேர் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

கோவை மலுமிச்சம்பட்டி அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (39). தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கடந்த திங்கட்கிழமை தனது நண்பர்களான ஞானபிரகாஷ், தமிழ்செல்வன் ஆகியோருடன் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றுள்ளார்.

அப்போது பிரபாகரனுக்கும், அங்கு மது குடிக்க வந்த 5 இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரபாகரன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது பின் தொடர்ந்து வந்து 5 இளைஞர்களுடன் பிரபாகரனை வழி மறித்து மட்டை மற்றும் சிமெண்ட் கல்லால் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த பிரபாகரன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

முன்னதாக டாஸ்மாக் கடையில் விசாரணை செய்த போது அந்த இளைஞர்கள் மது வாங்கிவிட்டு இணைய தளம் (கூகுள் பே) மூலம் மது பாட்டில்கள் வாங்கியது தெரியவந்தது. அதில், கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணை வைத்து போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

விசாரணையில், பரமகுடியை சேர்ந்த சந்திரசேகர் (23), மணிகண்டன் (19) ஆகிய இருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி தனிப்படை போலீஸார் திருப்பூர் சென்றனர். இந்நிலையில், தொழிலாளி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கோவை சிங்காநல்லூர் தனியார் வங்கி மேலாளராக பணியாற்றி வந்த பரமகுடியை சேர்ந்த மணிகண்டன் (27), கரன் என்கிற கார்த்திகேயன் (24), முனீஸ்வரன் (27) ஆகிய மூன்று பேர் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

சரணடைந்த மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...