உருமாறிய கொரோனா எதிரொலி: கோவை விமான நிலையத்தில் கண்காணிப்பு மையம் துவக்கம்

நாளை முதல் கண்காணிப்பு நெறிமுறைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில், இன்று முதலே கோவை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கும் பணி துவங்கியது.



கோவை: சீனாவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து, இந்தியாவில் பரவலைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். அதன்படி, அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமீபத்தில் மத்திய சுகதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில், இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகள் அனைவரும் முறையாக தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், முககவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்ற நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களின் நுழைவாயில்களில் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கிரீனிங் செய்ய வேண்டும் என்றும் 2% சதவீத பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யவும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.



அதன்படி, கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை செய்யும் மையம் இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு காலை ஏர் அரேபியா மற்றும் மாலை சிங்கப்பூர் விமானம் என இரண்டு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகிறது.



நாளை 24 ஆம் தேதி முதல் கண்காணிப்பு நெறிமுறைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில், இன்று முதலே கோவை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கும் பணி துவங்கியது.



அதன்படி, ஏர் அரேபியா விமானம் மூலம் வந்த பயணிகள் தெர்மல் ஸ்க்ரீனிங் மூலம் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டது. மேலும், விமான நிலையம் வரும் அனைத்து பயணிகளும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச விமான நிலையம் வந்தடையும் பயணிகளுக்கு 2 சதவீதம் ரேண்டம் (random testing) அடிப்படையில், கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...