பெரியாரின் 49-வது நினைவு தினம்: அமைச்சர் செந்தில் பாலாஜி மரியாதை..!

கோவையில் பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, காந்திபுரம், பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



கோவை: தந்தை பெரியாரின் 49-வது நினைவு தினம் இன்று (டிச.24) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பெரியாரின் சிலைகள் மற்றும் புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வருகிறது.



முன்னதாக, தந்தை பெரியாரின் 49-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு கீழே உள்ள பெரியாரின் படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



அதேபோல, கோவையில் பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, காந்திபுரம், பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட திமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர், தளபதி முருகேசன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், தந்தை திராவிட பெரியார் கழக பொதுச்செயலாளர், கு ராமகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.





Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...