கோவை நேரு விளையாட்டு அரங்கில் ரூ.7.35 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ரூ.6.55 கோடி மதிப்பீட்டில் சிந்தடிக் ஓடுதளம் மற்றும் ரூ.65.15 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு மைதான மராமத்து பணிகளுக்கு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், சிந்தடிக் ஓடுதளம் செயற்கை இழை ஓடுபாதை அமைத்தல் மற்றும், மைதானம் சிறப்பு மராமத்து பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.



இந்த விழாவிற்காக அவினாசி சாலையில் தங்கும் விடுதியில் இருந்து நேரு விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தந்த தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அவினாசி சாலையில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும், ஜென்னி கிளப் அருகே 300 பேர் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.6.55 கோடி மதிப்பில் செயற்கை இழை ஓடு பாதை அமைக்கும் பணி (சிந்தடிக் ஓடுதளம்) மற்றும் ரூ.65.15 லட்சம் மதிப்பில் நேரு விளையாட்டு மைதானம் மராமத்து பணிகள் ஆகியவற்றை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.



இந்த விழாவில், இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, மாவட்ட ஆட்சியர் சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர். மீனா லோகு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் எம்பி நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ க்கள் ஆறுகுட்டி, பனப்பட்டி தினகரன், கோவை செல்வராஜ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...