பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, வெல்லம் வழங்க வேண்டும் - பாஜக சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக விவசாய அணி சார்பில் கோரிக்கை மனு.



கோவை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் கரும்பு, வெல்லம் உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், வரும் 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரை மற்றும் பச்சரிசியுடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இம்முறை கரும்பு, வெல்லம் ஆகியவை தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெறவில்லை.



இந்நிலையில் தமிழக அரசு விவசாயிகள் பயிரிட்ட செங்கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றை சேர்த்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கோவை மாவட்ட பாஜக விவசாய அணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.



பாஜக விவசாய அணி தலைவர் வசந்தசேனன் தலைமையில், மனு அளிக்க அந்த பாஜகவினர் வெல்லத்தை கையில் ஏந்தி அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...