கோவையில் 8 வயது பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த 53 வயது தாத்தா போக்சோவில் கைது..!

கோவை கருமத்தம்பட்டி அருகே சொந்த பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாத்தாவை பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகேயுள்ள சோமனூர் பகுதி சேர்ந்த 53 வயதான ஒருவர், அவரது 8 வயது பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

வீட்டில் இருக்கும் பொழுது பாசமாக கொஞ்சுவது போல பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பாட்டியிடம் தெரிவித்துள்ளார். சிறுமிக்கு முதியவர் செய்த பாலியல் சீண்டல் பின்னர் குடும்பத்தார் அனைவருக்கும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து குடும்பத்தினர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகார், பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த பேரூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக அரவணைத்து பாதுகாப்புடன் நடக்க வேண்டிய தாத்தாவே சொந்த பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...