கோவை மாவட்ட மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கிய ஆட்சியர் சமீரன்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் தொடங்கி வைத்த நிலையில், கோவையில் ஆட்சியர் சமீரன், 893 சுய உதவி குழுக்களுக்கு ரூ.58 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.


கோவை: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவிகளை வழங்கினார்.



மேலும் அந்த நிகழ்ச்சியில் மணிமேகலை விருதுகள் மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் முதல்வரால் வழங்கப்பட்டு, பல்வேறு புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் முடிவுற்ற திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் 893 சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.



இந்நிகழ்வு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலை அரங்கத்தில் நடைபெற்றது.



இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.

அதன்படி, சுய உதவிக் குழுக்களுக்கான வங்கி கடன், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கான வங்கி பெருங்கடன், சுய வேலைவாய்ப்பு திட்டம், சமுதாயத்திறன் பள்ளிகள் அமைப்பதற்கு நிதி, சமுதாயப் பண்ணை பள்ளிகள் அமைப்பதற்கான நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக 893 சுய உதவி குழுக்களுக்கு 58.004 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் 2704 பயனாளிகள் பயன் பெற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...