பழங்கால வாழ்க்கை முறையை குறித்த அக்ரோனோவா-17 கண்காட்சி


பண்டைய நாகரீகத்தையும், பழங்கால சுகாதாரமான வாழ்க்கை முறையையும் மீட்டெடுக்கும் வகையில் தமிழ்நாடு வேளாணமை பல்கலைக்கழக மாணவர்கள் அக்ரோனோவா-17 என்ற கண்காட்சியை நடத்தினர். 





இன்று ஒரு நாள் நடைபெறும் இக்கண்காட்சியில் பழங்கால உணவுப்பொருட்கள், உழவு மற்றும் விவசாயப்பொருட்கள், பழங்கால நாணயங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. மேலும், பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்த மாணவர்களின் அறிவியல் கண்காட்சியும் அதில் இடம்பெற்றுள்ளது.









இது குறித்து வேளாண்மை பல்கலைக்கழக மாணவி வெற்றிச்செல்வி கூறுகையில், 'பழங்காலத்தில வாழ்க்கை முறையை பின்பற்ற வலியுறித்தி அக்ரோனோவா-17 கண்காட்சி நடைபெற்று வருகிறது. விவசாயம் நாட்டின் முதுகெலும்பாக உள்ள நிலையில், அது பின்னோக்கி செல்கிறது. பல விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இதை முற்றிலுமாக மாற்றி விவசாயத்தை சார்ந்தே மனித வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே இக்கண்காட்சியின் நோக்கம். 



இக்கண்காட்சியில் தேனிவளர்ப்பு முறைகள், மருத்துவ குணமுள்ள செடி வகைகள் மற்றும் பழங்கால உணவுப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. நாடு வளம் பெற வேண்டுமானால் விவசாயம் தழைக்க வேண்டும்' 

இவ்வாறு வெற்றிச்செல்வி கூறினார்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...