கோவை புத்தாண்டு கொண்டாட்டம்: 1500 போலீசார்; 68 வாகனங்களில் ரோந்து - மாநகர போலீசார் தீவிர கண்காணிப்பு

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சட்ட ஒழுங்கு பிரச்சனை எதுவும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக கோவை மாநகர போலீசார் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துள்ளனர் அதன்படி, மாநகரில் உள்ள 62 தேவாலயங்கள், 11 இந்து வழிபாட்டுத்தலங்கள் போலீசாரின் பாதுகாப்பின் கீழ் வந்துள்ளது.


கோவை: 2023 ஆம் ஆண்டை வரவேற்க கோவை மாநகரின் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கோவை மாநகர காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன்படி, மாநகர் பகுதியில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, மாநகர் பகுதியில் உள்ள62 தேவாலயங்கள், 11 இந்து வழிபாட்டுத்தலங்கள் போலீசாரின் பாதுகாப்பின் கீழ் வந்துள்ளது.



அதேபோல, மாநகர்பகுதிகளில் 29 இடங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். அதில், 15 பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரேஸ் கோர்ஸ், வாலாங்குளம், வ. உ.சி பூங்கா உள்ளிட்ட 12பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளை பலப்படுத்தி உள்ளனர். அதேபோல, காந்திபுரம், சிங்காநல்லூர், சாய்பாபா காலனி உள்ளிட்ட 6 பேருந்து நிலையங்கள், கோவை மெயின் ஜங்ஷன் , வடகோவை , போத்தனூர் உள்ளிட்ட 5 ரயில்வே ஜங்ஷன்களில் போலீஸ் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



புத்தாண்டு இரவு முதல் அடுத்த நாள் 1 ஆம் தேதி காலை வரை அனைத்து மேம்பாலங்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாநகர் பகுதியில் உள்ள 9 மேம்பாலங்களும் மூடப்பட்டு போலீசாரின் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது.

44 இருசக்கர வாகனங்களில், 24 நான்கு சக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோல, 22 முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வேகமாக வாகனங்களை இயக்குபவர்கள், மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குபவர்கள், ஹாரன் மூலம் அதிக ஒலி எழுப்பவது உள்ளிட்ட தடை செய்யப்பட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் புத்தாண்டை வரவேற்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...