கோவையில் இருந்து புறப்பட்ட சார்ஜா விமானத்தில் பறவைகள் மோதி எஞ்சின் பழுது - விமான சேவை ரத்து

கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமான எஞ்சினில் பறவைகள் மோதி எஞ்சின் பழுதானதால், விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.



கோவை: கோவை விமான நிலையத்திலிருந்து சார்ஜா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு விமானங்கள் இயக்கபட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு கோவை விமான நிலையத்திலிருந்து சார்ஜாவுக்கு ஏர் அரேபிய விமானம் 164 பயணிகளுடன் புறப்பட தயாரானது. 

அப்போது விமானம் பறக்க துவங்கிய தருவாயில், விமானத்தில் இடது எஞ்சினில் பறவைகள் திடீரென மோதியதில் இன்ஜின் பிளேடில் பழுது ஏற்பட்டது. உடனடியாக விமான ஓட்டுநர், விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்து பத்திரமாக விமானத்தை, கோவை விமான நிலையத்தில் தரையிறக்கினார். பின்னர், விமானத்தில் இருந்த 164 பயணிகளும் பத்திரமாக வெளியில் அழைத்துவரப்பட்டனர். 

என்ஜினை பொறியாளர்கள் ஆய்வு செய்த போது, இறந்த நிலையில் ஒரு பறவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அப்புறப்படுத்திய பொறியாளர்கள், எஞ்சினை மாற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மாற்று என்ஜின் வரும் வரை விமானத்தை இயக்க முடியாத சூழல் உள்ளதால், விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை சர்வதேச விமான நிலையத்தில் காத்திருப்பு அறையில் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த பயணிகள் அனைவரும், விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சில பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்துள்ள நிலையில், மாற்று எஞ்சின் பொருத்தப்பட்டு பிறகே மீண்டும் ஏர் அரேபியா இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

என்ஜின் கோளாறு ஏற்பட்டவுடனே உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...