கோவை விழா: கோவையில் நடைபெற்ற இசையுடன் கூடிய கண்கவர் லேசர் ஷோ நிகழ்ச்சி

இன்று மாலை கோவை வாலாங்குளத்தில் இசையுடன் கூடிய லேசர் ஷோ நிகழ்ச்சியை, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தனர்.



கோவை: ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வரும் கோவை விழா, வரும் 4-8 ஆம் தேதி முதல் கொண்டாப்படவுள்ளது.



இவ்வாண்டு, 15 வது கோவை விழாவை முன்னிட்டு இன்று இசையுடன் கூடிய லேசர் ஷோ நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.



கடந்த நவம்பர் 24ஆம் தேதி கோவை விழாவை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த வருடம் 15 வது கோவை விழாவை முன்னிட்டு, 15 சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதில், மாரத்தான், அறிவியல் விழாக்கள், ஹேக்கத்தான்கள், இசை நிகழ்ச்சிகள், கலை அமர்வுகள், விளையாட்டுகள் மற்றும் போட்டிகள் ஆகியவை அடங்கும்.



நாளை மறு நாள் நிகழ்ச்சி துவங்கவுள்ள நிலையில், இன்று மாலை கோவை வாலாங்குளத்தில் இசையுடன் கூடிய லேசர் ஷோ நிகழ்ச்சியை, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தனர்.



இந்நிகழ்வில், பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் கிராமத்தில் நடைபெறும் திருவிழா போலவே, மாநகர் பகுதிகளில் கோவை விழா நடைபெறுவதாக தெரிவித்தார்.

அனைத்து கலாச்சாரங்களை ஒருங்கிணைத்து பல்வேறு நிகழ்ச்சிகள் கோவை விழாவில் இடம் பெற உள்ளதாகவும், அதில் குறிப்பாக கார் கண்காட்சி, விவசாய கண்காட்சி நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.



பின்னர் நடைபெற்ற லேசர் ஷோ நிகழ்ச்சியில் கண்கவர் வண்ண லேசர் விளக்குகள் இசைக்கேற்றவாறு பிரதிபலித்தது காண்போரை வெகுவாக கவர்ந்தது.

கோவை விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ட்ரீட் ஆர்ட் நிகழ்ச்சியில், 70 கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்படும் என்றும் கோயம்புத்தூர் காட் டேலண்ட் நிகழ்ச்சி பல்வேறு திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளமாக இருக்கும், என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

அக்ரி நெக்ஸ்ட், கார் பேரணி, செஃப்ஸ் பிளேட், தி பிட்ச், பாரா ஸ்போர்ட்ஸ் மற்றும் இசை மழை ஆகியவை இந்த வருடம் திட்டமிடப்பட்ட மற்ற நிகழ்வுகள் ஆகும்.





Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...