கோவை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்

கோவை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், கோவையில் 14,98,721 ஆண் வாக்காளர்களும், 15,51,421 பெண் வாக்காளர்களும், 558 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளதாக தெரியவந்துள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் கடந்த நவம்பர் 9ஆம் தேதி முதல் டிசம்பர் 8 தேதி வரை அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், மற்றும் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



இந்நிலையில் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்டார்.



அதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 30,50,700 ஆக உள்ளது. அதில் 14,98,721 ஆண் வாக்காளர்கள், 15,51,421 பெண் வாக்காளர்கள், 558 இதர வாக்காளர்களாக உள்ளனர்.

தொகுதி வாரியாக வாக்காளர் எண்ணிக்கை:

மேட்டுப்பாளையம் - 2,99,304

சூலூர் - 3,18,364

கவுண்டம்பாளையம் - 4,57,408

கோவை வடக்கு - 3,31,062

தொண்டாமுத்தூர் - 3,26,895

கோவை தெற்கு - 2,43,819

சிங்காநல்லூர் - 3,23,962

கிணத்துக்கடவு - 3,29,186

பொள்ளாச்சி - 2,23,316

வால்பாறை - 1,97,384



மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது, “வோட்டர்ஸ் ஹெல்ப் லைன்” (voters helpline) என்ற செல்போன் செயலி மூலமாகவோ பொதுமக்கள் தங்கள் மனுக்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...