ஈஷாவை தமிழக அரசு கையகப்படுத்த வலியுறுத்தி மார்க். கம்யூ. கட்சியின் கோவை மாவட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்..!

கோவையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தில், ஈஷாவை தமிழக அரசு கையகப்படுத்த வலியுறுத்தியும், பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றம்.


கோவை: கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு கூட்டம் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன், கோவை மக்களவை உறுப்பினர் P.R.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு,

1) நீர்வழி மற்றும் யானை வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் பல்வேறு மனித இழப்புகளுக்கு காரணமாக உள்ள ஈஷா நிறுவனத்தை கையகப்படுத்த வேண்டும்.

2) மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, GST மற்றும் மூலப்பொருள் விலையேற்றத்தால் பஞ்சாலை போன்ற சிறு தொழில்கள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

3) கோவைக்கு தனி ரயில்வே கோட்டம் அமைக்கப்பட்டு, தென் தமிழக பகுதிக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்.

4) கோவை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் நிலையில், அதனை உடனடியாக நடை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5) 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பேரூர் கோவிலை புறந்தள்ளி, ஈஷா நிறுவனத்திற்கு மத்திய அரசின் மானியங்கள் வழங்கப்படக் கூடாது.

6) வரும் பிப்ரவரி 3ஆவது வாரத்தில் தொழில் பாதுகாப்பு மற்றும் மக்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

7) மத்திய அரசின் திட்டங்களை கோவை மக்களவை உறுப்பினர் தடுப்பதாக பொய் செய்தி பரப்பும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டிக்கும் விதமாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...