கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு நாள் கல்வி சுற்றுலா - மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஏற்பாடு

36 மாற்றுத்திறனாளிகள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் ஒருநாள் கல்வி சுற்றுலாவாக போத்தனூர் மகாத்மா காந்தி அருங்காட்சியகம், பொள்ளாச்சி ஆழியார் அணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



கோவை: கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆரம்ப நிலைய பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் செவித்திறன் குறைபாடு, கண்பார்வை குறைபாடு மற்றும் மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளை ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.



இதையடுத்து இன்று 36 மாற்றுத்திறனாளிகள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒரு நாள் சுற்றுலாவாக போத்தனூரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி அருங்காசியகம் மற்றும் பொள்ளாச்சி ஆழியார் அணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த சுற்றுலா வாகனத்தின் பயணத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் இந்த சுற்றுலாவுக்காக ரூ.10,000 ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...