தமிழை மத்திய தொடர்பு மொழியாக அறிவிக்க கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - மதிமுக அவைத்தலைவர் துரைசாமி

தமிழை மத்திய தொடர்பு மொழியாக்கும் தீர்மானத்தை பாஜக அரசு நிராகரிக்கும் பட்சத்தில், அதன் உண்மை தன்மையை அறிந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றார்.


திருப்பூர்: திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் உள்ள மதிமுக தொழிற்சங்க அலுவலகத்தில் மதிமுகவின் அவை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சு.துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வரும் 9ஆம் தேதி கூட உள்ள தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழை மத்திய தொடர்பு மொழியாக அறிவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அதனை மத்திய அரசு நிராகரிக்கும் பட்சத்தில் மத்திய அரசின் உண்மை தன்மையை அறிந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்.

இதேபோல் இந்தி பேசாத ஒவ்வொரு மாநிலங்களிலும் மாநில மொழியை தொடர்பு மொழியாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்ற முன்வர வேண்டும். இந்தி மொழி பேசும் மாநிலங்கள் எல்லாம் ஆங்கில மொழியை கட்டாய மொழியாக்கி கொண்டு தமிழகத்தில் பாஜக இந்தியை திணிக்க முயற்சித்து வருகிறது.

ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பதன் மூலம் தமிழர்கள் வெளிநாடுகளில் தங்கள் ஆளுமையை செலுத்தி வருகின்றனர். மதிமுகவின் வாரிசு அரசியல் குறித்த கேள்விக்கு மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. மதிமுகவின் எதிர்காலம் அதன் நடவடிக்கைகளை பொறுத்து அமையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...