நம் கலாச்சாரத்தில் காணாத பொருளா காதல்? எதிர்பாளர்களுக்கு இளைஞர்கள் கேள்வி.


மிக விரைவில் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், காதல் குறித்து சுவாரஸ்யமான மற்றும் விவாதத்திற்கு உரிய கட்டுரைகளை நாள்தோறும் "சிம்ப்ளி சிட்டி" வழங்கி வருகிறது. 

ஒருபுறம் காதல் புனிதமானது, ஆத்மார்த்தமானது என்று பலர் கூற, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காதலர் தின வாழ்த்து அட்டைகள் உட்பட காதலுக்கு உரித்தான பொருட்களை எரித்தும் சில அமைப்பினர் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், காதலர் தினம், வளர்ந்து வரும் நாகரிகத்தில் காதல் அடைந்த வளர்ச்சி? காதலுக்கு எதிர்ப்புகள் வருவது முறையா? போன்றவைகள் குறித்து கோவையில் உள்ள இளைஞர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தோம். 

இளைஞர்கள் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு :



சிவா ( சமூகவியல் மாணவர் ) : 

உலகிலுள்ள அனைவராலும் கொண்டாடப்பட வேண்டியது காதல் ஆனால் சில அமைப்பினர் தொடர்ந்து காதலுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். காதலின்றி இம்மண்ணில் பிறந்தவர்கள் யாரும் இல்லை. ஒரு சிலர் காதல் என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்தலாம். அதற்காக காதலே தவறானது என்று கூறுவதும், கண்மூடித்தனமாக அதற்கு எதிர்ப்புக்களை தெரிவிப்பதும் மிகவும் தவறான செயல். ஒரு பெண்ணோ அல்லது ஆணோ காதலித்து ஏமாற்றப்படுகிறார்கள் என்றால் அவர்களிடம் சில அத்தியாவசிய குணங்கள் இல்லாமலே கூட இருந்திருக்க கூடும். வீட்டில் பார்த்து திருமணம் செய்பவர்கள் இறுதியில் விவாகரத்து கேட்டு அலையும் கதை இங்கு யாருக்கும் தெரியாதா? அப்படி இல்லற வாழ்வை விட்டு சிலர் விலக நினைக்கும்போது திருமணம் என்பதையும் தவறு என்கிறார்களா? பிடிக்கவில்லை என்றால் விலகிக்கொள்ளலாம். ஆனால், உங்கள் கருத்தை மற்றவர்களின் மீது திணிக்காதீர்கள்.



மணிகண்டன் ( தனியார் நிறுவன ஊழியர் ) : 

கடந்த சில ஆண்டுகளாக தான் மக்களுக்கு காதல் மீது இருந்த தவறான பார்வை மாறியுள்ளது. அதோடு, காதல் தற்போது பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறது. சிலர் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள தயங்குகின்றனர். அந்த காலத்தில் இல்லாத வசதிகள் தற்போது உள்ளது. அதனால், ஒரு ஆணும், பெண்ணும்  à®Žà®³à®¿à®¤à®¾à®• பேசிக்கொள்ள முடிகிறது. பார்க்காமல், பேசாமல் வாழ்வது மட்டும் காதல் அல்ல. இந்த தொழில்நுட்ப யுகத்தில் ‘வாட்சப்’ உதவியோடு ஒருவர் மீது ஒருவர் அன்பை செலுத்துவதிலும் ஆத்மார்த்தமான காதல் உள்ளது. 

இருவர் மனதையும் சார்ந்து எழுவது தான் காதல். திருமணம் முடிந்த பின் கணவன்-மனைவிஇடையே கருத்து வேறுபாடு  à®à®±à¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ விவாகரத்து பெறுவதையும் அவர்கள் மீண்டும் மணம் முடிப்பதையும் இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளும் போது, காதலர்களிடையே கருத்து வேறுபாடு  à®à®±à¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ ‘ப்ரேக்-அப்’ செய்து கொள்வதில் எந்த தவறும் இல்லை என்பது என் கருத்து. 



சுஸ்மிதா ( வேதியியல் துறை மாணவி ) :  

நம் கலச்சாரத்தில் காணாத ஒரு பொருள் இல்லை காதல். சங்க கால இலக்கியங்கள், மன்னர்கள் மற்றும் நாம் இன்று வணங்கும் முருகப்பெருமான் வரையில் அனைவரையும் காதல் சூழ்ந்துள்ளது. ஆனால், இதையறியாமல் பலர் தற்போது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு பானங்கள் போல காதலும் நம்மீது திணிக்கப்பட்ட ஒன்று என்று அவர்கள் கருதுகிறார்கள். இது முற்றிலும் தவறான ஒரு கருத்து. காலங்காலமாக வாழும் காதல் தற்போது சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. நம் வாழ்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை போல தான் காதலிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாகவே அண்டை நாட்டு காலச்சாரமான காதலர் தினத்தை கொண்டாடி வருகிறோம். காதலர் தினத்தை எதிர்ப்பதுவும் காதலை எதிர்பதுவும் ஒன்றே. சிலர் காதலர் தினம் மீது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலருக்காக உலகம் முழுவதும் கொண்டாடும் நாளை நாம் புறக்கணிக்க தேவை இல்லை. இதுவே என் கருத்து.

இவ்வாறு காதலுக்கும், காதலர் தினத்துக்கும் ஆதரவாக இளைஞர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 

வாசகர்கள், காதல் குறித்த தங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...