உடலுக்கு வலுவூட்டும் 555 சிறுதானிய உணவுகள் - கோவையில் தொடங்கியது சிறுதானிய மாநாடு!

கோவையில் தமிழ்நாடு சிறுதானிய மாநாட்டை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். சிறுதானியங்கள் மூலம் 555 உணவு வகைகளை தயாரித்து காட்சிப்படுத்தியது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது.



கோவை: கோவை சுங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் நிர்மலா கல்லூரியில் தமிழ்நாடு சிறுதானிய மாநாடு - 2023 இன்று துவங்கியது.



இந்த மாநாட்டை உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார். மாநாட்டில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் சிறுதானிய உணவுகள், உணவு பொருட்கள், சிறுதானியம், மருத்துவ குணம் சார்ந்த புத்தகங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.



மேலும் 7 சிறுதானியங்களை கொண்டு 555 வகையான சிறுதானிய உணவுகளை தயாரித்து, உணவு கண்காட்சியும் திறந்து வைக்கப்பட்டது. இதில் சிறுதானியங்களை கொண்டு 555 உணவு வகைகளை தயாரித்து காட்சிப்படுத்தியது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது. இதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



இதைத் தொடர்ந்து கல்லூரி கலையரங்கில் நடந்த கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், சித்த மருத்துவர் சிவராமன், கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...