கோவையில் வடிவேலு பாணியில் கிணற்றை காணவில்லை என ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பொதுமக்கள் முழக்கம் - பரபரப்பு..!

கோவை தீத்திப்பாளையம் அடுத்த விவேகானந்தர் நகரில் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனை ஆக்கிரமிப்பை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் முன் கிணற்றை காணவில்லை என்ற பதாகைகளுடன் முழக்கம்.


கோவை: கோவை மாவட்டம் பேரூர் அடுத்த தீத்திபாளையம் விவேகானந்தர் நகரில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனையை சிலர் ஆக்கிரமிப்பு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.



இதனை கண்டிக்கும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அப்பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கிணற்றை காணவில்லை என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினர்.

இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவை தீத்திபாளையம் விவேகானந்தர் நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள 70 சென்ட் அங்கீகரிக்கப்பட்ட மனை பிரிவை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இதனை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ய முயற்சி செய்து வருகின்றனர். மேலும் மனை பிரிவுகளில் உள்ள கிணற்றையும் காணவில்லை.

எனவே ரிசர்வ் சைட்டை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அங்கு ஊராட்சிக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைப்பதோடு கம்பி வேலியிட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்களது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளுடன் பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...