ஆளுநருக்கு வலுக்கும் எதிர்ப்பு - கோவையில் ஆளுநர் உருவபொம்மை எரிப்பு போராட்டம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என், ரவியை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், ஆளுநரின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியபோது, தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என அழைக்கலாம் என்று கூறியது அரசியல் கட்சியினர், மொழிப்பற்றாளர்கள் என பல தரப்பினரின் விமர்சனத்திற்கும் உள்ளானது.

அதேபோல் நேற்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டின முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேரவை நிகழ்ச்சி முடியும் முன்பே, அவையிலிருந்து ஆளுநர் வெளியேறிய சம்பவம் சர்ச்சைக்குள்ளானது.

இதனையடுத்து, தமிழ்நாட்டிற்கான ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் ஆளுநருக்கு எதிரான கண்டனப்பதிவுகளும் முன்வைக்கப்பட்டுவருகின்றன.



அதன் ஒரு பகுதியாக, கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தியும், அவரது நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கழகத்தின் அமைப்பு செயலாளர் ஆறுசாமி தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்று மத்திய அரசு மற்றும் ஆளுநருக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர். பின்னர், ஆளுநரின் உருவ பொம்மையை எரித்ததால், அவர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது தபெதிக அமைப்பு செயலாளர் ஆறுமுகசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பல்வேறு போராட்டங்களுக்கு பின், தமிழ்நாடு என பெயர் வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநரோ, தமிழ்நாடு என்ற பெயரை சொல்லுவதற்குக்கூட தயங்குகிறார்.

ஆந்திர பிரதேசம் மத்திய பிரதேசம் போன்றவற்றில் இருக்கக்கூடிய பிரதேசம் என்கின்ற சொல்லும் நாட்டை குறிப்பதுதான். தமிழ்நாடு என்று சொல்ல மாட்டேன் என ஆளுநர் கூறுவதை கண்டித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

ஆளுநர், சமூக நீதி, பெண் உரிமை, பெரியார் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெயர்களைக்கூற மறுப்பத்தைக் கண்டித்தே அவரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே அவர் எழுந்து சென்றது ஜனநாயக மரபு அல்ல

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...