கோவை அருகே பைக் மீது கார் மோதல் - ஒருவர் படுகாயம்!

கோவை மத்தம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அதிவேகமாக வந்த கார் மோதி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.


கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்றுள்ளார். மத்தம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே அதிவேகமாக வந்த கார் பழனிசாமி வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த பழனிசாமி படுகாயமடைந்தார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் பழனிசாமியை மீட்டு சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் காரை ஓட்டிவந்த நீலகிரியைச் சேர்ந்த யஷ்வத் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...