தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட புகார் - விசாரணை அதிகாரி நியமனம்!

கோவை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்த புகார்களை விசாரிக்கும் அதிகாரியாக பி.நவநீதகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி (Ombudsperson) உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக பி.நவநீதகிருஷ்ணன் என்பவர் கோவை மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணிபுரிபவர்கள் 8925811303 என்ற தொலைபேசி எண்ணிலும், [email protected] என்ற இமெயிலும் புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...