கோவை வ.உ.சி மைதானத்தில் புகைப்படக் கண்காட்சி - ஆட்சியர் தகவல்

கோவை வ.உ.சி மைதானத்தில் புகைப்படக் கண்காட்சி, வரும் 13ம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையில் நடக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறுகிறது.

கோவை வ.உ.சி மைதானத்தில் புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜீ.எஸ் சமீரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை வ.உ.சி மைதானத்தில் அரசின் ஓராண்டு அரும்பணிகள் அணிவகுப்பு குறித்து "ஓயா உழைப்பின் ஓராண்டு. கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி" என்ற தலைப்பில் அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் அன்று 13.01.2023 முதல் 22.01.2023 வரை நடைபெறவுள்ளது. (10 நாட்கள்) தினசரி மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெற உள்ளது.

இப்புகைப்படக் கண்காட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள், அரசின் சிறப்புத் திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் திட்டம், காலை உணவுத் திட்டம், எண்ணும் எழுத்து, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், கல்லூரி கனவு, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண், நம்ம ஊரு சூப்பரு, மீண்டும் மஞ்சப்பை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி. அமைச்சர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் இடம்பெறவுள்ளன.

இப்புகைப்படக் கண்காட்சி நடைபெறும் நாட்களில் தினந்தோறும், பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர் கல்வித்துறையின் சார்பில், மாணவ, மாணவியர்களைக் கொண்டு கலைநிகழ்ச்சிகளும், கலைப்பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் ஒயிலாட்டம், தப்பாட்டம் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

மேலும், மகளிர்த் திட்டம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களைக் கொண்டு தெருவோர உணவகம் போன்ற அமைப்பில் சிறுதானியம் மற்றும் பல்சுவை உணவுடன் கூடிய அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களைக் கொண்டு சமத்துவ பொங்கல் விழாவும் நடைபெறவுள்ளது.

இப்புகைப்படக் கண்காட்சியினை, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் 13ஆம் தேதியன்று மாலை 6 மணிக்கு வஉசி மைதானத்தில் தொடங்கி வைத்துப் பார்வையிட உள்ளார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையாளர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த இப்பாகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டுப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...