காவல் நிலையங்களில் ‘சாலை பாதுகாப்பு பொங்கல்’- கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்

கோவையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரும் 17ஆம் தேதி “சாலை பாதுகாப்பு பொங்கல் பண்டிகை” கொண்டாடப்பட உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேட்டி



கோவை: இந்தியாவில், சாலை விதிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 11ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் படி, கோவை மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்றைய தினம் தொடங்கியது. இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று கோவை மாநகரில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக கோவை லட்சுமி மில்ஸ் சிக்னலில் தன்னார்வ தொண்டு அமைப்புடன், மாநகர காவல்துறை இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இந்த நிகழ்வில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நடன அசைவுகளுடன் வாகன ஒட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



மேலும் ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.



அதேபோல், ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.



இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் குறித்தும் பாதுகாப்பான பயணங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:

கோவை மாநகரிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், வாடகை டாக்சி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுனர்கள், தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் அனைவருக்கும் கண் மருத்துவமனைகள் மூலம் கண் பரிசோதனை முகாம், வரும் 15ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஜனவரி 16ஆம் தேதி கோவை மாநகர் முழுவதும் அந்தந்த காவல் நிலையங்களில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கு பெற உள்ளனர்.

மேலும், வரும் 17ஆம் தேதி பொங்கல் பண்டிகையை “சாலை பாதுகாப்பு பொங்கல் பண்டிகை”ஆக கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுடன் இணைந்து கொண்டாடப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...