கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து!

கோவை வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து 4 வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை வெள்ளலூர் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு நகரில் சேகரிப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு தரம் பிரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவைத் தொடர்ந்து குப்பைகளை விரைந்து திடக்கழிவு மேலாண்மை செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.



இந்நிலையில் இன்று குப்பை கிடங்கின் தெற்கு பகுதியில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.



இதையடுத்து அங்கிருந்த தீயணைப்பு வாகனம் மூலம் தீ அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.



ஆனால் தீ, அரை ஏக்கர் பரப்பளவிற்குக் கொழுந்து விட்டு எரிந்ததால் தீயைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாததால், உடனடியாக கோவை தெற்கு, கிணத்துக்கடவு, கோவைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.



குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.



தற்போது ஒரு ஏக்கர் பரப்பளவிற்குக் குப்பைகளை பொக்லைன் மூலம் அப்புறப்படுத்தி தீ அணைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...