செம்மேடு அருகே சாலை விபத்தில் இருவர் படுகாயம்

கோவை செம்மேடு அருகே சுற்றுலா வாகனம் மீது பைக் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.


கோவை: கோவை பேரூர் மத்திபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (24). இவர் தனது நண்பரான மணிசங்கர் (26) என்பவருடன் பைக்கில் கோவை-குற்றாலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.



செம்மேடு அருகே உள்ள வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்த பைக் எதிரே வந்த சுற்றுலா வாகனம் மீது மோதியது.



இதில் தூக்கிவீசப்பட்டு இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலென்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து சுற்றுலா வாகன ஓட்டுநர் ஜமீலிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...