எடப்பாடி பழனிசாமியை விட எஸ்.பி வேலுமணி சிறந்தவர் - புகழேந்தி புகழாரம்

அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி காட்டிலும் எஸ்.பி வேலுமணியே சிறந்தவர் என அதிமுக ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுக ஓபிஎஸ் அணி கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், உச்சநீதிமன்றம் வழக்குகளை ஒருவார காலம் தெளிவாகக் கேட்டு அறிந்திருக்கிறார்கள். நாளைய தீர்ப்பைச் சரித்திரம் சொல்லும். உன்னதமான தீர்ப்பை உச்சநீதிமன்றத்திலிருந்து கிடைக்கப் பெறுவோம்.

ஓபிஎஸ் தான் இந்த கழகத்தை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்கின்ற தீர்ப்பு நிச்சயமாக உச்ச நீதிமன்றத்திலிருந்து வரும் என்கின்ற நம்பிக்கை தங்களிடத்தில் மிகத் தெளிவாக உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், என்னைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியைக் காட்டிலும் எஸ்.பி.வேலுமணி தான் 100சதவீதம் சிறந்தவர். சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி கருப்பு சட்டை அணிந்து செல்லும் போது, அவராவது ஈபிஎஸ்-க்கு புத்திச்சொல்ல வேண்டுமல்லவா? அல்லது பொன்னையன் ஆவது சொல்ல வேண்டும் அல்லவா, என வினவினார். மேலும் எடப்பாடி அணியில் இருக்கக்கூடியவர்கள் அறிவை அடைமானம் வைத்து விட்டார்களா என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...