கோவையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு 240 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களுக்காக, கோவையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு 240 சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்.


கோவை: பொங்கல், தீபாவளி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிகளவில் தங்கள் ஊருக்குச் சென்று வருவது வழக்கம். அதுவும் பொங்கல் பண்டிகைக்காக ஒரு வாரம் வரை தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு விடுமுறை அளிக்கப்படுவதால், ஏராளமானோர் தங்களின் சொந்த ஊருக்குப் படையெடுப்பது வாடிக்கை.

இந்நிலையில் கோயம்புத்தூரிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக விழாக்கால சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாகக் கோயம்புத்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட நான்கு பிரதான பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மார்க்கமாகச் செல்லும் பயணிகளுக்கு ஏதுவாகவும், சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து கரூர், திருச்சி மார்க்கமாகச் செல்லும் பயணிகளுக்கு ஏதுவாகவும், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைக்கட்டி, சத்தியமங்கலம் மார்க்கமாகச் செல்லும் பயணிகளுக்கு ஏதுவாகவும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊட்டி, மேட்டுப்பாளையம் மார்க்கமாகச் செல்லும் பயணிகளுக்கு ஏதுவாகவும் விழாக்கால சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

கோவை முதல் மதுரை வரை 100 பேருந்துகளும், கோவை முதல் தேனி வரை 40 பேருந்துகளும், கோவை முதல் திருச்சி வரை 50 பேருந்துகளும், கோவை முதல் சேலம் வரை 50 பேருந்துகளும் மொத்தமாக 240 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் உக்கடம், காந்திபுரம் போன்ற மாநகரப் பேருந்து நிலையங்களிலிருந்து இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பொதுமக்களின் வசதிக்கும், தேவைக்கும் ஏற்ப கூடுதலாகப் பேருந்துகள் இயக்க தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...