கிணத்துக்கடவு அருகே சமத்துவ பொங்கல் விழா - மக்களுடன் ஆட்சியர் கும்மியடித்து மகிழ்ச்சி!

கிணத்துக்கடவு அருகே வடசித்தூர் சமத்துவபுரத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் சமீரன், பொதுமக்களுடன் கும்மியடித்து மகிழ்ச்சி.


கோவை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தை பொங்கலை வரவேற்கும் விதமாகச் சமத்துவ பொங்கல் விழா மாவட்டம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் வடசித்தூர் பகுதி சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும், சாதி, மத பேதமின்றி கலந்து கொண்டு புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். இந்த விழாவில், கும்மியாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.



இந்த விழாவில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் தாரேஷ்அகமது, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கூடுதல் ஆட்சியர் அலர்மேலு மங்கை, பொள்ளாச்சி சார் ஆட்சி பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு கும்மியடித்து அசத்தினர்.



இதைத்தொடர்ந்து நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டி, வாலிபால் போட்டியிலும் பொதுமக்களோடு கலந்து விளையாடினர். இதைத்தொடர்ந்து சமத்துவபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட வீடுகளும் ஆய்வு செய்தனர். இந்த விழாவில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...