'சுற்றுலாத்துறையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது..!' - கோவையில் அமைச்சர் ராமச்சந்திரன் பெருமிதம்!

கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் வெளிநாட்டில் இருந்து 12 லட்சம் பேரும், உள்நாட்டில் இருந்து 11 கோடி பேரும் சுற்றுலாவிற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி.



கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள வாலாங்குளம் படகு இல்லம் மற்றும் காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வில், படகு இல்லம் மற்றும் தமிழ்நாடு ஹோட்டலில் கூடுதல் வசதிகள் செய்வது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.



இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்திப்ப நந்தூரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:



சுற்றுலா துறையை பொருத்தவரை தமிழ்நாடு அளவிற்கு இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் கிடையாது. தமிழகத்தில் கோவில்கள் அதிகம் உள்ள காரணத்தால் ஆன்மீகச் சுற்றுலா அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் முன்னோர்கள் கட்டிய கட்டிடங்களில் உள்ள கலை நுணுக்கங்கள் இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. நான், சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.

உதகையில் உள்ள படகு இல்லங்களில் கூடுதல் வசதிகளை செய்வதற்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியாருக்கு நிகராக தமிழ்நாடு ஹோட்டல்களை தரம் உயர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியில் உள்ள ஸ்மார்ட் சிட்டி குளங்களில் வாலாங்குளத்தில் இருக்கும் படகு இல்லத்தில் அதிவேக படகுகள் செலுத்துவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி இடங்களில் வாகன நிறுத்தம் வசதி குறைவாக உள்ளதாக எழுந்த கோரிக்கையை தொடர்ந்து அதனை மேம்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இன்னும் ஓராண்டில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

கடந்த 2022 ஆண்டில் 12 லட்சம் அயல் நாட்டவர்களும், 11 கோடி உள்நாட்டு மக்களும் சுற்றுலாவிற்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். சுற்றுலா துறையிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

பொள்ளாச்சி பலூன் திருவிழாவில் ஒரு நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது என்ற தகவல் தவறானது. ஒரு நபருக்கு 1,500 ரூபாய் தான் வசூலிக்கப்படுகிறது.

வேளாண் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...