பாஜக-வை கண்டித்து நடைபயணம் - நடிகை காயத்ரி ரகுராம் அறிவிப்பு

பாஜகவை கண்டித்து வரும் 27ஆம் தேதி முதல் சென்னை முதல் கன்னியாகுமரி வரையில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் அறிவிப்பு.


கட்சி பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத பாஜகவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நடைபயணமாக செல்ல உள்ளதாக நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், காயத்ரி ரகுராமுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் நிலவி வந்த நிலையில், அண்ணாமலை திட்டமிட்டு தன்னை பற்றிய அவதூறு கருத்துகளை உருவாக்குவதாக சமீபத்தில் காயத்ரி ரகுராம் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் கட்சியிலிருந்து விலகுவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து பாஜக உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்ட நிலையில், பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பேசியிருந்தார். மேலும் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்தும், பாஜக குறித்தும் விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத பாஜக கட்சியை கண்டித்து சென்னை முதல் கன்னியாக்குமரி வரை நடைபயணமாக செல்ல உள்ளதாக காயத்ரி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரித்தள்ளார்.



இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், 'பா.ஜ.க பெண்களை அவமானப் படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். இந்த பயணத்தில் யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம்.



எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை. என் உயிர் போனாலும் செய்வேன். நான் நீதிக்காக போராடுவேன். நான் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். இது அரசியலில் பொது சேவை மற்றும் பொது வாழ்க்கை பெண்களுக்கானது' என்று பதிவிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...