இளம் பத்திரிக்கையாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை: சிறப்பு விருந்தினராக 'தினமலர்' செல்வகுமார் பங்கேற்பு



பல்வேறு ஊடகங்களில் பணியாற்றி வரும் இளம் பத்திரிக்கையாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை கோவை பத்திரிக்கையாளர்களால் தொடங்கப்பட்டுள்ளது. பிரதி மாதம் இரண்டு மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ள இந்த பயிற்சி பட்டறையின் முதல் நிகழ்வு இன்று கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.

'ஊடகவியலாளர் நெறிமுறைகள் மற்றும் சமூக பொறுப்புடனான சூழலியல் செய்தி சேகரிப்பு' என்ற தலைப்பில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் மூத்த பத்திரிக்கையாளரும், தினமலர் (கோவை) நாளிதழின் தலைமை செய்தியாளருமான சேவியர் செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பத்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-



தமிழகத்தில் பல்வேறு ஊடகங்கள் செயல்பட்டு வருகின்றன, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபட்ட கொள்கைகள் இருக்கலாம். ஆனால், பத்திரிக்கையாளர்களாகிய நாம் உண்மையை உரக்கச்சொல்வதை உறுதிப்படுத்த வேண்டும். பத்திரிக்கை துறை சார்ந்த படிப்பு என்பது ஒரு தகுதி மட்டுமே, அதையும் தாண்டி பத்திரிக்கையாளர்களாகிய நாம் சேவை மனப்பான்மையை மையக்கருவாக வைத்து பணியாற்ற வேண்டும். அப்போது தான் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நம்மால் செய்திகளை வெளியிட முடியும்.

உண்மையான கருத்துக்களை வெளிக்கொணரும் போது அதை நிறுவனமே எதிர்க்க வாய்ப்பு உள்ளது. அந்த நேரத்தில், 'இது தான் நிதர்சனம், செய்தி இப்படித்தான் வெளியாக வேண்டும்' என்பதில் ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் உறுதி தெரிவிக்க வேண்டும். தற்போதய சூழலில் பலர் ஊடகத்துறையை தவறாக பயன்படுத்துகின்றனர். இது ஒட்டுமொத்த ஊடகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர வேண்டும். தற்போதி, இளைஞர்கள் பலரும் பத்திரிக்கை துறையில் காலடி வைத்திருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். அதே நேரத்தில், அவர்களின் நேர்மைக்கும் தலைவணங்குகிறேன். அவர்களின் நேர்மையான எந்த ஒரு செயலுக்கும் நான் துணை நிற்பேன். 



சுற்றுச்சூழல் மற்றும் அதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தொடர் கட்டுரைகள் எழுதுவதில் எனக்கும், நான் பணியாற்றும் நிறுவனத்திற்கும் அதிக ஆர்வம் உள்ளது. அதன் விளைவாகவே சூழலியல் தொடர்பானை பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறோம். சூழலியல் தொடர்பான பிரச்சனைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு நல்ல பத்திரிக்கையாளரின் கடமை. அதனால், நேர்மையான இளம் பத்திரிக்கையாளர்களை எனது சொந்த செலவில்  à®šà¯‚ழலியல் ஆய்வுக்கு விரைவில் அழைத்துச்செல்ல முடிவு செய்துள்ளேன்.  à®‡à®µà¯à®µà®¾à®±à¯ சேவியர் செல்வகுமார் பேசினார்.

இந்த பயிற்சிப்பட்டறையின் மூலம் மூத்த பத்திரிக்கையாளரின் அனுபவங்களையும், செய்தி சேகரிப்பின் போது கடைபிடிக்க வேண்டிய நுணுக்கங்களையும் எளிதாக தெரிந்து கொண்டதாக இளம் பத்திரிக்கையாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிகழ்வின் முடிவில் சிறப்பு விருந்தினருக்கு பத்திரிக்கையாளர் மன்றத்தின் தலைவர் ஸ்ரீதர் மற்றும் செயலாளர் ஷாதிக் நினைவுப்பரிசை வழங்கி கவுரவித்தனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...